செவ்வாய், 29 நவம்பர், 2016

ஒபாமா கடைசி விருந்து வெள்ளை மாளிகையில் ..!

ஒரு வழியாக அதிபர் ஒபாமா விடை பெற்று விட்டார். கட்சி விருந்தும் கொடுத்து விட்டார். வான்கோழி பிரியாணி போட்டு வெள்ளை மாளிகையையே கமகமக்க செய்து விட்டார்.
ஏகப்பட்ட விஐபிகள்..! ஒயின்கள் பொங்கியது. ஆட்டம் குலுங்கியது. அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பம் மட்டும் சற்று இறுக்கத்துடன்  இருந்ததாம்.
ஆம். எட்டு வருடங்கள் ஆண்ட நாடு. எட்டு வருடங்கள் வாழ்ந்த மாளிகை. இந்த தாம் தூம் பார்ட்டியில் சைக்கிள் கேப்பில் தனது பாய் பிரண்டையும் வர வைத்து விட்டார் ஒபாமாவின் அழகுப் பொண்ணு  மலியா.
காதலனை வரவழைத்தது ஒபாமாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மகள், இது வெள்ளை மாளிகையில் கடைசி பார்ட்டி என்று கூறியதால் பின்னர் அதை அதிபர் ஒபாமா கண்டுகொள்ளவில்லையாம்.
 இது கடைசி நாளுப்பா..” என்று கண் கலங்கினார் அந்த அழகு தேவதை..
கூல் ஆனார் தகப்பன் ஒபாமா. மீண்டும் வான்கோழிப் பார்ட்டி கலை கட்டியதாம்..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 நவம்பர், 2016

மர்மமாக திருகோணமலையில் இறக்கும் மீன்கள்!

பெருமளவு மீன்கள் திருகோணமலை கடற்கரை பகுதியில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிலோ எடையை கொண்ட பூச்சக்கன்னி எனப்படும் இனத்தை சேர்ந்த பெருமதியான மீன் வகைகளே இவ்வாறு கரையெதுங்குகின்றது.

குறித்த மீன்கள் உயிரிழப்பதற்கான காரணங்கள் இது வரை இனம்காணப்படவிலை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்று முன் தினம் வரையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட தொகையை கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீன்கள் இறந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் கடற்தொழில் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>