புதன், 26 மே, 2021

பத்து பேர் யாழில் ட்ரோன் கெமராவிடம் சிக்கிய வர்கள் கைது

யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் இன்றைய தினம் விமானப்படை மற்றும் யாழ்ப்பாண காவல் துறை இணைந்து ரோன் கமரா பயன்படுத்தி யாழ் நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்ததில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.
26-05-2021.இன்று (காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கெமரா கண்காணிப்பின் போதே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் 
அவர் தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த போன்ற குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும்
 தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 30 செப்டம்பர், 2020

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பலகோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல்

பொலநறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடிப் பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதன் நிறை இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருங்கல்லுக்கு 
நடுவில் சிக்கியிருக்கும் இரத்தினக்கல் சுமார் 1000 கரட்டிற்கும் அதிகம் எனக் குறிப்பிடப்படுகின்றது.கருகல்லுக்குள் சிக்கிய 
நிலையில் இரத்தினக்கல் இருப்பது மிகவும் அரிதான விடயம் எனவும் சுரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 30 ஏப்ரல், 2020

தனது கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் 37 விசயங்கள்

 :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்துஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் 
என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >


சனி, 11 ஆகஸ்ட், 2018

மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்.

மொனராகலை, எதிமலே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த பாடசாலை மாணவிகள் மூன்று பேரை பல்வேறு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்த சிறுமிகளை கடந்த 2012ம் ஆண்டு முதல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், மூத்த சகோதரிக்கு அப்போது 10 வயது 
என்று தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரால் குறித்த சகோதரிகள் பல ஆண்டுகளான பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமிகள் தற்போதும் பாடசாலை செல்லும் மாணவிகள் என்று பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கும் 05 மகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் அந்தக் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பேணி வந்துள்ள போதிலும் பெற்றோர் அதனை அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடயங்கள் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ​நேற்று சியம்பலாண்டுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 5 ஆகஸ்ட், 2017

இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.சாரதியின்றி இயங்கும் முச்சக்கரவண்டி

முச்சக்கரவண்டியொன்றை, சாரதியின்றி இயக்கும் முறையொன்றை, நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞனொருவர் கண்டுபிடித்துள்ளார்.
நுவரெலியா, களுகெல்ல பகுதியைச் சேர்ந்த, சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞனே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
முச்சக்கரவண்​டியொன்றை, தொலையியக்கியின் மூலம் (Remote Controller) இவர் கட்டுப்படுத்துகின்றார். ​இதற்கு, அவருக்கு ஐந்து நாட்கள் மாத்திரமே எடுத்ததாக அவர் கூறினார்.
இயந்திரவியல் தொழில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர், எரிபொருளின் மூலம் ஓடும் முச்சக்கரவண்டியை தொலையியக்கின் மூலம் இயங்கவைப்பதற்கு எடுத்த முயற்சி, பலனளிப்பதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை பார்வையிடுவதற்கு, பெருந்திரளான மக்கள், தலவாக்கலை நகரசபை மைதானத்தில் கூடியிருந்தனர்.
தன்னிடமிலுள்ள திறமைகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில், மேலும் சில தொலையியக்கி சாதனங்களைக் கண்டுபிடிக்கவுள்ளதாக குறித்த நபர் கூறியுள்ளார். எனினும், அதற்கான பொருளாதார உதவிகளை செய்யுமிடத்து, தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை தன்னால் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

  மாதிரிப்படம் 


சனி, 28 ஜனவரி, 2017

மோட்டார் சைக்கிள் சாகச காட்சிகள் யாழில் இடம்பெற்றது!

யாழில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக மோட்டார் சைக்கிள் சாகச  கண்காட்சி 27.01.2017 வெள்ளிக்கிழமை
 நடைபெற்றது  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 15 டிசம்பர், 2016

பாம்பு தீண்டி யாழில் சிறுவன் பரிதாப பலி!

! பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு 
அவதிப்பட்டுள்ளான்.
இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான்.
எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>