யாழில் இம்முறை பருவமழை பொய்த்துள்ளநிலையில் நேற்றையதினம் யாழ் நகரை அண்டிய பிரதேசங்களில் சுமாரான மழை பெய்து ள்ளது.
யாழ். குடாநாட்டில் மழைபெய்யாததால் இம்முறை கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. விவசாயிகள் நெற் பயிற்செய்கைக்காக
பருவ மழையை
எதிர்பார்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளநிலையில் நேற்று புதன்கிழமை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி,கோப்பாய்,கல்வியங்காடு பகுதிகளில் இந்த மழை பெய்துள்ளது.
இந்தநிலையில் இன்றையதினம் தாவடி,கொக்குவில், சுதுமலை போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது.இருப்பினும் நெல் விதைப்பு இடங்களில் இதுவரை மழை பெய்யாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக