ஒரு வழியாக அதிபர் ஒபாமா விடை பெற்று விட்டார். கட்சி விருந்தும் கொடுத்து விட்டார். வான்கோழி பிரியாணி போட்டு வெள்ளை மாளிகையையே கமகமக்க செய்து விட்டார்.
ஏகப்பட்ட விஐபிகள்..! ஒயின்கள் பொங்கியது. ஆட்டம் குலுங்கியது. அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பம் மட்டும் சற்று இறுக்கத்துடன் இருந்ததாம்.
ஆம். எட்டு வருடங்கள் ஆண்ட நாடு. எட்டு வருடங்கள் வாழ்ந்த மாளிகை. இந்த தாம் தூம் பார்ட்டியில் சைக்கிள் கேப்பில் தனது பாய் பிரண்டையும் வர வைத்து விட்டார் ஒபாமாவின் அழகுப் பொண்ணு மலியா.
காதலனை வரவழைத்தது ஒபாமாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மகள், இது வெள்ளை மாளிகையில் கடைசி பார்ட்டி என்று கூறியதால் பின்னர் அதை அதிபர் ஒபாமா கண்டுகொள்ளவில்லையாம்.
இது கடைசி நாளுப்பா..” என்று கண் கலங்கினார் அந்த அழகு தேவதை..
கூல் ஆனார் தகப்பன் ஒபாமா. மீண்டும் வான்கோழிப் பார்ட்டி கலை கட்டியதாம்..!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக