ஞாயிறு, 6 நவம்பர், 2016

மர்மமாக திருகோணமலையில் இறக்கும் மீன்கள்!

பெருமளவு மீன்கள் திருகோணமலை கடற்கரை பகுதியில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிலோ எடையை கொண்ட பூச்சக்கன்னி எனப்படும் இனத்தை சேர்ந்த பெருமதியான மீன் வகைகளே இவ்வாறு கரையெதுங்குகின்றது.

குறித்த மீன்கள் உயிரிழப்பதற்கான காரணங்கள் இது வரை இனம்காணப்படவிலை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்று முன் தினம் வரையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட தொகையை கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீன்கள் இறந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் கடற்தொழில் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக