அமெரிக்காவினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டம் – 2017 (அமெரிக்கன் கிறீன் கார்ட்) விசாவுக்கு விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 3 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது க.பொ.த உயர்தரத்தில் (A/L) மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி அவசியமானதாகும்.
2017 ஆம் நிதியாண்டில் 50,000 பேர் இத்திட்டத்தினூடாக உள்வாங்கப்பட இருக்கின்றார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க முகவர்களையோ, தரகர்களையோ நாடவேண்டாம் என எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதரகம் இதற்கான வழிகாட்டல்களை தமிழிலும் வழங்கியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக