ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம்!!

எச்சரிக்கை தேவை: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம். நாட்டில் கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதிக­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக ரிசேர்வ் வங்கி உய­ர­தி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் “நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்­டு­களின் 
புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்­டு­களை மக்கள் கவனத்­துடன் பயன்­ப­டுத்த வேண்டும். நல்ல நோட்­டு­களில் அதி­க­ளவு பாது­காப்பு அம்­சங்கள் உள்­ளதால் மக்கள் கள்ள நோட்டு­களை எளிதில் 
அடை­யாளம்
மேலும், கள்ள நோட்டை புழக்­கத்தில் விடுபவர்கள் அடை­யாளம் காணப்­பட்டால் அவர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்­சரிக்கை விடுத்­துள்­ளது.­ தண்டனை
 வழங்கப்படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.தண்டனை வழங்கப்படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 21 அக்டோபர், 2016

இம்முறை பருவமழையால் ஏமாற்றம் அடையும் விவசாயிகள்!

  
   யாழில் இம்முறை பருவமழை பொய்த்துள்ளநிலையில் நேற்றையதினம் யாழ் நகரை அண்டிய பிரதேசங்களில் சுமாரான மழை பெய்து ள்ளது. 
யாழ். குடாநாட்டில் மழைபெய்யாததால் இம்முறை கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. விவசாயிகள்  நெற் பயிற்செய்கைக்காக 
பருவ மழையை
 எதிர்பார்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளநிலையில்  நேற்று புதன்கிழமை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி,கோப்பாய்,கல்வியங்காடு பகுதிகளில் இந்த மழை பெய்துள்ளது.
இந்தநிலையில் இன்றையதினம் தாவடி,கொக்குவில், சுதுமலை போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது.இருப்பினும் நெல் விதைப்பு இடங்களில் இதுவரை மழை பெய்யாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 19 அக்டோபர், 2016

இளஞ்செழியன் அறிவிப்பு அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது !

யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரன சிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி
 செய்துள்ளார்.
இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,
செந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.
இப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலையில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை
 பாதிக்கப்படும்.
இந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலக்கட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.
வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.
எங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.
இந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.
ஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.
இவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.
இவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.
குடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
இந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தர்பபில் முன்னிலையாகி இருந்தார். எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>