வியாழன், 15 டிசம்பர், 2016

பாம்பு தீண்டி யாழில் சிறுவன் பரிதாப பலி!

! பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு 
அவதிப்பட்டுள்ளான்.
இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான்.
எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 3 டிசம்பர், 2016

பனங்கூடலுக்குள் ஆசிரியை இழுத்துச் சென்ற 4 ஆண்கள்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையை 4 இளைஞர்கள் பனங்கூடலுக்குள் கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் சிறுவர் இராஜாங்க அமைச்சரின் மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்குச் சென்றுவிட்டு தனியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை நெடுந்தீவு வெட்டைக்காட்டுப் பகுதியில் வைத்து மடக்கிய நான்கு ஆண்கள் வலு கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் இருந்த பனந்தோப்புப் பகுதிக்குள் கொண்டு 
சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தின் பின்னர் சற்று நேரத்தில் அப்பகுதியால் சென்ற விதானை ஒருவர், தனியே ஒரு பெண்ணின் சைக்கிளும் கைத்தொலைபேசி, செருப்புக்களும் காணப்பட்டதையடுத்து அங்கு தேடுதல் நடத்திய போது அப்பகுதிக்கு வந்த ஒரு சிலர் அங்கு பெண்ணின் அவலக் குரல் கேட்பதாக கூறிய போது, பொலிசாருக்கு அறிவித்து விட்டு அப்பகுதிக்கு
 சென்று பார்த்தார்.
அந் நேரம் அங்கு பொலிசாரும் வந்து குறித்த நபர்களைத் துரத்திப் பிடித்துள்ளனர். இதில் இருவர் பிடிபட இருவர் தப்பியோடியதாகத் தெரியவருகின்றது.
தப்பியோடியவர்களை பொலிசார் தேடிவருகின்றனர். குறித்த சம்பவம் ஒருதலைக்காதலால் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
இவை தொடர்பில் செய்திகள் இருட்டடிப்புச் செய்யப் பட்டமை
 குறிப்பிடத் தக்கது.